news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews வைரலாகும் நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு
tv

Also Watch

வைரலாகும் நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

எமோஜியையும் பதிவிட்டுள்ளார்.

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வைரலாகும் நடிகை த்ரிஷா

நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும் 

நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும் என்பதால், நல்லதையே செய்யுங்கள், நல்லவராக இருங்கள் என நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.

பாட்டியின் 98-வது பிறந்தநாளை கொண்டாடிய அவர், அப்புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, இந்த வயதில் இத்தகைய நாடகத்தனமான விஷயங்கள் சங்கடத்தைத்தான் தரும், போய் பணம் சம்பாதித்து நிம்மதியாக இருங்கள் என குறிப்பிட்டு, புருவங்களை உயர்த்தி ஒரு எமோஜியையும் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், இதுதான் உங்களுக்கான அனைத்தும் இறுதியில் சிறப்பாக அமையும் காலகட்டம் என தெரிவித்துள்ளார்.

"மண்டாடி" படத்தின் 2-வது பாடல் விரைவில் வெளியீடு 

நடிகர் சூரி நடித்துள்ள "மண்டாடி" திரைப்படத்தின் 2-வது பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

நாகை பகுதி மீனவர்களின் வாழ்வியலையும், அங்கு நடைபெறும் படகு போட்டிகளையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் "மண்டாடி மண்டாடி" எனும் முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது மெலோடியாக உருவாகியுள்ள 2-வது பாடல் விரைவில் வெளியாகும் என தேதி குறிப்பிடாமல் படக்குழு அறிவித்துள்ளது.

அன்பே டயானா திரைப்படத்தின் ஓடிடி ரீலிஸ்

பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன் நடிப்பில் வெளியான அன்பே டயானா திரைப்படம், வரும் 28-ம் தேதி SonyLIV ஓடிடி தளத்தில் வெளியாகிறது.கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்தப் படம், 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடியது.

Related Link
விக்ரம் வெளியிட்ட ஒரு REELS, சுற்றி வளைத்த வனத்துறையினர்

விக்ரம் வெளியிட்ட ஒரு REELS, சுற்றி வளைத்த வனத்துறையினர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குரூப் 2, 2A தேர்வு அறிவிப்பு வெளியீடு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved