news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews விநாயகர் சதுர்த்தியை இப்படி கொண்டாடுங்க
tv

Also Watch

விநாயகர் சதுர்த்தியை இப்படி கொண்டாடுங்க

Green India Challenge

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விஜய் தேவரகொண்டா

Green India Challenge குழுவினர் விதை விநாயகர் சிலை

நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு Green India Challenge குழுவினர் விதை விநாயகர் சிலையை வழங்கி கௌரவிச்சாங்க. பிறகு நிகழ்ச்சியில பேசுன விஜய் தேவரகொண்டா, அனைவரும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை சுற்றுச்சூழலுக்கு உகந்த மண் விநாயகர் மற்றும் விதை விநாயகர் சிலைகளுடன் கொண்டாடனுன்னு வேண்டுகோள் விடுத்தாரு.

“பாதுகாப்பான களிமண் மற்றும் விதை விநாயகர் சிலைகளை பயன்படுத்துங்கள். இதன் மூலம் நமது நகரத்தை மாசுபடுத்தாமல் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடலாம். விழா முடிந்த பிறகு, அந்த சிலையிலிருந்து ஒரு செடி வளரத் தொடங்குன்னு சொன்ன அவர் எல்லாருக்கு தனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவிச்சாரு.

தீபாவளியையொட்டி வெளியாகும் சூர்யாவின் ” சீன்”

ழகரம் ஸ்டுடியோஸ் - 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் தயாராகி வரும் சூர்யா 47 படத்திற்கு 'சீன் - SCENE ' என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்குது.

அத்தோட இந்த திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. காமெடி வித் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ழகரம் ஸ்டுடியோஸ், 2 டி என்டர்டெய்ன்மென்ட் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்புல தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறாங்க.

மதுரை மக்களுக்கு ஜிகர்தண்டா வாங்கி தந்த SK

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்புல ராஜ்கமல் ஃபிலிம் சென்டர் நேஷனல் தயாரிப்புல இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்துல சேயோன் என்ற திரைப்படப்பிடிப்பு மதுரையில் நடந்துட்டு வருது.

படப்பிடிப்பின் இடைவெளியில் மதுரையில் உள்ள மதுரை ஃபேமஸ் ஜிகர்தண்டா கடைக்கு போன சிவகார்த்திக்கேயன் அங்க இருந்த பொதுமக்களுக்கு ஜிகர்தண்டா வாங்கி கொடுத்து மகிழ்ச்சியோட பேசுனாரு.

Related Link
நடிகர் ஜிவி பிரகாஷுக்கு YAMAHA RX100 பரிசளிப்பு

நடிகர் ஜிவி பிரகாஷுக்கு YAMAHA RX100 பரிசளிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியரை சென்னை அணிக்கு பயிற்சியாளராக்க வேண்டும்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved