news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews சினி நியூஸ் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை
tv

Also Watch

சினி நியூஸ் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை

Cine news

43

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cinema news1

ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் : 

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஜூலை 31ம் தேதி திரைக்கு வம் இப்படம், நோ வே ஹோம் முடிவுக்குப் பிறகு, பீட்டர் பார்க்கரின் வாழ்க்கையில் ஏற்படும் புதிய திருப்பங்களை விவரித்துள்ளது. ஆக் ஷன் காட்சிகள் நிறைந்த இத்திரைப்படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

"அமைதிப்படை" திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி ரீ ரிலீஸ் :

அரசியல் களத்தை தோலுரித்து காட்டிய "அமைதிப்படை" திரைப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரீ - ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தை ஸ்பேரோ சினிமாஸ் சார்பில் கார்த்திக் வெங்கடேசன், 4K தொழில்நுட்பம் மற்றும் டால்பி ஒலியுடன் மேம்படுத்தி உள்ள நிலையில், இதன் டிரெய்லர் மார்ச் 30-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர் சத்யராஜ், இயக்குநர் மணிவண்ணன் கூட்டணியில் 1994-ம் ஆண்டில் இப்படம் வெளியானது.

லெஜண்ட் சரவணனின் ‘லீடர்' திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் :

லெஜண்ட் சரவணன் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள ‘லீடர்' திரைப்படத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்க பணிகளை துரைராஜும், சண்டை காட்சிகளை மேத்யூ மகேஷும் மேற்கொண்டுள்ளனர். ஆக்சன் கதையம்சம் கொண்ட இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகிறது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் :

நடிகர் சூர்யாவின் "கருப்பு" திரைப்படம் மே 4-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யாவுடன் த்ரிஷா கிருஷ்ணன், இந்திரன், நட்டி சுப்ரமணியம், ஸ்வாசிகா, ஷிவதா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். சாய் அபியங்கர் இசையமைக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், 2-வது பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக கூறப்படுகிறது.

Related Link
சேயோன் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் கமல்ஹாசன்?

சேயோன் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் கமல்ஹாசன்?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved