Also Watch
Read this
By: Manigandan Raja

அஜித் நடிப்பில் உருவாகும் 'டேர் டெவில்' திரைப்படம்
அஜித்தின் 'DARE DEVIL' படத்தில் மோகன்லால் மற்றும் ஸ்ரீலீலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், கால்ஷீட் பிரச்சனை காரணமாக இருவரும் திரைப்படத்திலிருந்து வெளியேறியதாக சொல்லப்படுகிறது. கிச்சா சுதீப்பை நடிக்க வைக்க படக்குழு பேச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
வேட்டுவம் படத்தின் World Of Vettuvam அறிமுக பாடல்
ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் வேட்டுவம் திரைப்படத்தின் அறிமுக வீடியோவை இயக்குநர் ப.ரஞ்சித் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கிராமப்புற பின்னணியில் வாழும் ஒரு ரவுடியின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைப்படம் உருவாகிறது.

ஜெயிலர் 2 படத்தில் நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு
ரஜினி காந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு, திலீப் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் வரும் 15-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நாள்தோறும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved