Also Watch
Read this
By: Manigandan Raja

முதல் வாரத்தில் ரூ.178.75 கோடியை வசூலித்த ஜனநாயகன்
முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகனின் வசூல் இந்தியாவில் 200 கோடி ரூபாயை கடந்துள்ளது. சென்சார் பிரச்சனையால் பெரும் போராட்டத்துக்கு பின் கடந்த ஜூலை 23ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸானது.
முதல் வாரத்தில் 178 கோடி 75 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலித்த திரைப்படம், இரண்டாவது வாரத்தில் 36 கோடியே 75 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளது. முதல் வார வசூலை ஒப்பிடுகையில், இரண்டாவது வாரத்தில் வசூல் 90 சதவீதம் சரிந்துள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய லாபகரமான படம் 'பிகில்'
ஏஜிஎஸ் நிறுவனத்தின் பயணத்தில் மிகப்பெரிய லாபகரமான படம் 'பிகில்' தான் எனவும், அது சரியான முறையில் எங்கும் பதிவாகவில்லை" எனவும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஏஜிஎஸ் நிறுவனம் இதுவரை அதிக செலவில் தயாரித்த திரைப்படம் பிகில் தான் என்றும், அதே நேரத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு அதிக லாபம் ஈட்டிக் கொடுத்த படமும் அதுதான் என கூறினார்.
ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே ரூ.400 கோடி வசூல்
ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே ஹாலிவுட் திரைப்படம் ரிலீஸான 8 நாட்களில் இந்தியாவில் மட்டும் 400 கோடி ரூபாய் வசூலை எட்டிப்பிடித்துள்ளது.

கடந்த ஜூலை 30ஆம் தேதி இந்தியாவிலும், 31ஆம் தேதி வெளிநாடுகளிலும் இத்திரைப்படம் ரிலீஸானது. இத்திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் உலகளவில் 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved