news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ரூ.3,000 கோடி வசூலை கடந்த துரந்தர்-2
tv

Also Watch

tv

Read this

ரூ.3,000 கோடி வசூலை கடந்த துரந்தர்-2

Durandhar-2

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சினிமா செய்திகள்

அனுபவத்தை பகிர்ந்து கொண்ட நடிகை மஞ்சு வாரியார் :

நடிகர் அஜித் உடனான பைக் பயணம் ஆன் ஸ்க்ரீனில் மட்டுமல்லாமல் ஆப் ஸ்க்ரீனிலும் இருக்கிற மறக்க முடியாத வாழ்க்கை அனுபவம் என்று நடிகை மஞ்சு வாரியார் தெரிவித்தார். ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அஜித்துடன் பைக் பயணம் மேற்கொண்ட புகைப்படம் காட்டப்பட்டு அதன் அனுபவம் குறித்த கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.

29' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பூ' வீடியோ பாடல் :

ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகி வரும் '29' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பூ' வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜின் STONE BENCH நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் விது மற்றும் ப்ரீத்தி அஸ்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைப்பில் ரவி இப்பாடலை பாடியுள்ளார்.

LIK திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'தீமா' வீடியோ பாடல் :

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் LIK திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தீமா வீடியோ பாடல் யூடியூபில் வெளியானது. அனிருத் இசையில் உருவான இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ரூ.3,000 கோடி வசூலை கடந்த துரந்தர்-2 :

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள துரந்தர் இரண்டாம் பாகம், உலக அளவில் 3 ஆயிரம் கோடி ரூபாய் வசூலை கடந்து இந்திய அளவில் அதிக வசூலான திரைப்படம் என்ற புதிய சாதனை படைத்துள்ளது. முன்னதாக ஆமீர்கானின் தங்கல் திரைப்படம் இரண்டாயிரம் கோடி ரூபாய் வசூலை கடந்து முதல் இடத்தில் இருந்தது.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

0
0 min agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved