Also Watch
Read this
By: Manigandan Raja

லவ் அண்ட் வார் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு :
கௌரி கிஷன் - ஆதித்யா பாஸ்கர் ஜோடி மீண்டும் இணைந்து நடித்துள்ள புதியப் படத்திற்கு 'லவ் அண்ட் வார்' எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்பட ரெடின் கிங்ஸ்லி, சரஸ் மேனன், ஜீவா ரவி, நந்திதா ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பவிஷ் நாராயண் கதாநாயகனாக நடிக்கும் "லவ் ஓ லவ்" :

மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாராயண் கதாநாயகனாக நடிக்கும் லவ் ஓ லவ் என்ற புதிய திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. இத்திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு யூடியூப் பிரபலம் நாக துர்கா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
ரவிமோகன் நடிப்பில் உருவாகி உள்ள கராத்தே பாபு :

கணேஷ் கே.பாபு இயக்கத்தில், ரவிமோகன் நடிப்பில் உருவாகி உள்ள கராத்தே பாபு திரைப்படம் ஆகஸ்ட் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் நாசர், கே.எஸ். ரவிகுமார், மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர், முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.