Also Watch
Read this
By: Manigandan Raja

இருண்ட சுரங்கப்பாதையின் மறுமுனையில் வெளிச்சம் :
இறுதியாக அந்த இருண்ட சுரங்கப்பாதையின் மறுமுனையில் வெளிச்சம் தென்பட்டுள்ளதாகவும், துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாவதற்கு வழிவகுக்கும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், சிலர் தனது திரைப்பயணத்தை அழிக்க நினைத்ததாக கூறியுள்ளார்.
‘சட்டென்று மாறுது வானிலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது :

ஜெய் நடிப்பில் உருவாகி வரும் ‘சட்டென்று மாறுது வானிலை’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ. ஆர். முருகதாஸிடம் சர்கார் மற்றும் தர்பார் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய பாபு விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில், யோகிபாபு, கேஜிஎப் புகழ் கருடா ராம், ஸ்ரீமன், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
“நூறு சாமி” படத்தின் “அம்மா அம்மாதான்” பாடல் வெளியானது :

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் நூறு சாமி’ திரைப்படத்தின் இரண்டாம் பாடலான ‘அம்மா அம்மாதான்’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் சசி உருவாக்கி வரும் இந்த படத்தில் அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், காவ்யா அனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மோகன் ராஜா எழுதிய ‘அம்மா அம்மாதான்’ பாடலுக்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ளார்.
இசையமைப்பாளர் மீது பாலியல் புகார் தெரிவித்த பாடகி ஸ்வாகதா :

இசையமைப்பாளர் மீது பாலியல் புகார் தெரிவித்த பாடகி ஸ்வாகதாவுக்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தோடு, அவர் யார் என்பது வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், குற்றச்சாட்டுக்குள்ளான இசையமைப்பாளரின் தவறான செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் :

அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடித்து
வெளியே வந்து அவருடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved