Also Watch
Read this
By: Manigandan Raja

வெளியான 4 நாட்களில் ரூ.51.3 கோடி வசூலித்ததாக அறிவிப்பு
"மீசைய முறுக்கு - 2" திரைப்படம் வெளியான 4 நாட்களில் 51 கோடியே 30 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இசையமைப்பாளரும், பாடகருமான ஹிப்ஹாப் ஆதியின் இயக்கம், இசை, பாடலில் உருவாகியுள்ள இந்த படத்தில், கேதிகா சர்மா, சைத்ரா ஜே ஆச்சார், ரம்யா ரங்கநாதன், பாபா பாஸ்கர், ஹர்ஷத் கான், நாசர் மற்றும் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதி நடித்துள்ள "பத்தா" திரைப்படம்
விஜய் சேதுபதி நடித்துள்ள "பத்தா" திரைப்படத்தின் 3-வது பாடல் "மொழியே" வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் லிஜோமோல் ஜோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை சினி ஒன் ஸ்டூடியோஸ், ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்க, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இந்த படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ரஜினிகாந்த் நடித்துள்ள "ஜெயிலர் - 2" திரைப்படம்
ரஜினிகாந்த் நடித்துள்ள "ஜெயிலர் 2" திரைப்படத்தின் 3வது பாடலான ‘ஒன் நேம்’ இன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நெல்சன் இயக்கத்தில், சிவராஜ்குமார், வித்யா பாலன், சூரஜ் வெஞ்சரமுடு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved