news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ரஜினியின் ஜெயிலர்-2 திரைப்படம் எப்படி இருக்கிறது?
tv

Also Watch

ரஜினியின் ஜெயிலர்-2 திரைப்படம் எப்படி இருக்கிறது?

JALIER 2 MOVIE REVIEW

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இயக்குநர் NELSON-ஓட இயக்கத்துல… ANIRUDH-ஓட இசைல… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எஸ்.ஜெ.சூர்யா, ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன் மாதிரியான நட்சத்திர பட்டாளம் நடிச்சு, ரசிகர்களோட மிகப்பெரிய எதிர்பார்ப்புல வெளியாகியிருக்குற 'Jailer 2' படம் பார்த்துட்டு வந்தாச்சு!

VARMAN-ஓட பின்னணி

முதல் பாகத்தோட Climax-ல VARMAN-ஐ கொன்னதுக்குப் அப்புறம், தன்னோட மகனையும் கொன்னுட்டு, TIGER MUTHUVEL PANDIAN-ம் அவரோட குடும்பமும் அமைதியான வாழ்க்கைக்குத் திரும்ப முயற்சி பண்றாங்க. ஆனா, VARMAN-ஓட பின்னணியில இருக்குற சக்திகளும், அவனோட GANG-உம் TIGER-ஐ தேடி வர, மறுபடியும் ஒரு பெரிய மோதலுக்குள்ள அவரும் அவரோட குடும்பமும், முதல் பாதில அவருக்கு உதவி செஞ்சவங்களும் சிக்கிக்கிறாருங்க. அதுக்கப்புறம் என்ன நடக்குது அப்படின்றதுதான் 'Jailer 2' படத்தோட கதை.

படத்தோட மிகப்பெரிய பலம்

இந்தப் படத்தோட மிகப்பெரிய பலம்… முதல் பாகத்துல WORK ஆன விஷயங்களை அப்படியே REPEAT பண்ணாம, அதே CHARACTERS-ஓட CONTINUITY-யையும் CHARACTER ARCS-ஐயும் Develop-பண்ணி, கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டுப் போயிருக்குற NELSON-ஓட SCREENPLAY தான். அவருக்கே உரித்தான DARK HUMOUR, MASS MOMENTS-ஐ உருவாக்குற விதம், குறிப்பா INTERVAL BLOCK மற்றும் CLIMAX-ஐ STAGE பண்ணியிருக்குற விதம் எல்லாமே நல்லா WORK OUT ஆகியிருக்கு.

இந்தப் படத்தோட உண்மையான STRENGTH-எ… SUPERSTAR RAJINIKANTH தான்! படம் முழுக்க அவரோட தோள்லதான் நிக்குது. TIGER MUTHUVEL PANDIAN-ஆ அவரோட STYLE, BODY LANGUAGE, COMEDY TIMING எல்லாமே சிறப்பா WORK OUT ஆகுது. அதே நேரத்துல EMOTIONAL SCENES-லயும் அந்தக் கதாபாத்திரத்தோட பாசத்தையும் தவிப்பையும் இயல்பா வெளிப்படுத்தியிருக்காரு. RAJINISM-ஐயும் CHARACTER-ஓட EMOTIONS-ஐயும் BALANCE பண்ணியிருக்குற விதம் அவரோட மிகப்பெரிய பலம்.

காமெடி தியேட்டரையே அதிரவைக்குது 

SUPPORTING CAST-ஐப் பொறுத்தவரைக்கும், RAMYA KRISHNAN, SURAJ, S. J. SURYAH, VIDYA BALANனு எல்லாரும் அவங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பா கையாண்டிருக்காங்க. குறிப்பா First Halfல NAMO NARAYANA மற்றும் YOGI BABU-ஓட காமெடி தியேட்டரையே அதிரவைக்குது. அடுத்த ப்ளிஸ் ANIRUDH! இந்த மாதிரியான COMMERCIAL ENTERTAINER-க்கு அவரோட MUSIC எவ்வளவு முக்கியம்னு மறுபடியும் நிரூபிச்சிருக்காரு. MASS MOMENT SCREEN-ல வர்றதுக்கு முன்னாடியே, அவரோட MUSIC CUE கேட்டதுமே THEATRE-ல விசில் பறக்குது. அதே மாதிரி VIJAY KARTIK KANNAN-ஓட CINEMATOGRAPHY-யும் NELSON-ஓட VISION-ஐ SCREEN-ல அழகா கொண்டு வருது.

ஆனா, படத்துல சில குறைகளும் இருக்கு. HILARIOUS-ஆவும் FAST-PACED-ஆவும் நகர்ற FIRST HALF-க்கு அப்புறம், SECOND HALF-ல EMOTIONS மேல அதிக கவனம் செலுத்தும்போது, படத்தோட வேகம் கொஞ்சம் குறையுது. சில PORTIONS-ஐ இன்னும் TIGHT-ஆ TRIM பண்ணியிருந்தா, OVERALL IMPACT அதிகமா இருந்திருக்கும். அதே மாதிரி, முதல் பாகத்துல VILLAIN ஏற்படுத்தின IMPACT-ஐ ஒப்பிடும்போது, இந்தப் படத்துல எதிர்தரப்பு கொஞ்சம் WEAK-ஆவே தெரியுது. சில இடங்கள்ல கதையை நகர்த்துறதுக்காக SCREENPLAY CONVENIENT-ஆ மாறுறதும் ஒரு MINUS.

பக்கா COMMERCIAL ENTERTAINER

என்னதான் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், RAJINIKANTH-ஓட SCREEN PRESENCE, NELSON-ஓட SCREENPLAY, ANIRUDH-ஓட MUSIC, INTERVAL மற்றும் CLIMAX-ல கிடைக்குற THEATRICAL HIGHS-னு 'Jailer 2' ஒரு பக்கா COMMERCIAL ENTERTAINER. குடும்பத்தோட சேர்ந்து சிரிச்சு, EMOTIONAL MOMENTS-ஐ ரசிச்சு, THEATRE-ல விசில் அடிச்சு கொண்டாடுற மாதிரியான ஒரு படத்தைப் பார்க்கணும்னு நினைக்கிறவங்களுக்கு 'Jailer 2' ஒரு பக்கா THEATRICAL ENTERTAINER. 50 வருஷம் இல்ல, இன்னும் 50 வருஷம் ஆனா கூட தமிழ் சினிமாவோட ஒரே சூப்பர்ஸ்டார் அவர்தான்னு ரஜினிகாந்த் மீண்டும் ஒருமுறை நிரூபிச்சிருக்காரு.

Related Link
400 ஏழைக் குடும்பங்களைத் தத்தெடுத்த ராஷ்மிகா மந்தனா

400 ஏழைக் குடும்பங்களைத் தத்தெடுத்த ராஷ்மிகா மந்தனா

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரஜினியின் ஜெயிலர்-2 திரைப்படம் எப்படி இருக்கிறது?

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved