news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள "I AM GAME" திரைப்படம்
tv

Also Watch

tv

Read this

நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள "I AM GAME" திரைப்படம்

Dulquer Salmaan

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
I AM GAME

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20-ல் வெளியீடு :

நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள "I AM GAME" திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகவுள்ளது.

"டிராகன்" திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு :

ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, "டிராகன்" திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் ஜூன் 11-ம் தேதி வெளியாகிறது.

வியாழக்கிழமை வெளியாகும் திரிஷ்யம்-3 :

ஜீத்து ஜோசப்-மோகன்லால் கூட்டணியில் உருவாகியுள்ள திரிஷ்யம்-3 திரைப்படத்தின் முன்பதிவு விறுவிறுபாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை சுமார் 22 கோடி ரூபாய் வரை டிக்கெட் முன்பதிவு நடைபெற்றுள்ளது. திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், நல்ல வசூலை ஈட்டும் என நம்பப்படுகிறது.

கருப்பு திரைப்படத்தின் BTS புகைப்படங்கள் :

சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள கருப்பு திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், திரைப்படத்தின் BTS புகைப்படங்களை நாயகி திரிஷா சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விமர்சன ரீதியாகவும் கருப்பு திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றுள்ளதால் சூர்யாவுக்கு கம்பேக் திரைப்படம என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மெகா-158 திரைப்படத்தின் பூஜை விழா :

'மன சங்கர வர பிரசாத் காரு' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் மெகா-158 திரைப்படத்தில் பூஜை விழா வியாழக்கிழமை நடைபெறும் நிலையில், விழாவில் பவன் கல்யான் மற்றும் ராம் சரண் ஆகியோர் கலந்து கொல்கின்றனர். 'வால்டர் வீரய்யா' படத்துக்கு பின் இயக்குநர் பாபி உடன் சிரஞ்சீவி கை கோர்க்கிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு..!!

2
3 hrs 33 mins agoshare
Neet exambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved