Also Watch
Read this
By: Manigandan Raja

சூர்யாவின் தோற்ற போஸ்டர் இன்று வெளியீடு
நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திர தோற்றம் குறித்த போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது வெறும் போஸ்டரா அல்லது கிளிம்ஸ் வீடியோவா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யாவின் ழகரம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு "சீனு" என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மறைந்த பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே
மறைந்த பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே பிறந்தநாளை ஒட்டி, அவர் கடைசியாக பாடிய திரைப்பட பாடல் வெளியாகியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஹரிஷ் வியாஸ் இயக்கத்தில் உருவான ‘ஓம் கா ஹரி’ என்ற இந்தி படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆ மேரி ஜிந்தகி, டு சுபி ஹாய் கஹாந்’ என்ற பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.

மாரடைப்பு காரணமாக மும்பை மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி உயிரிழந்த இவர், தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி என பல்வேறு மொழிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘பத்தா’ திரைப்படம்
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சாய் அபயங்கர் இசையில் ‘மகளே’ என்ற பாடல் வெளியாகிறது.

விஜய் சேதுபதி - இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குநர் அட்லீ தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved