Also Watch
Read this
By: Manigandan Raja

சிக்மா திரைப்பட விழாவில் மெகாஸ்டார் சிரஞ்சீவி நெகிழ்ச்சி
ஜேசன் சஞ்சயை பார்த்ததும் 90-களின் விஜய் நினைவுக்கு வந்ததாக மெகாஸ்டார் சிரஞ்சீவி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஐதராபாத்தில் நடைபெற்ற சிக்மா திரைப்பட விளம்பர விழாவில் பேசிய அவர், ஜேசன் சஞ்சயின் இயக்குநர் திறமை அவரது தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பாட்டி ஷோபாவிடம் இருந்து வந்ததாக பாராட்டினார்.
இராமாயணா படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியீடு
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிக்கும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் புதிய அதிகாரப்பூர்வ போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யாஷ் இடம்பெறும் போஸ்டர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இரண்டு பாகங்களாக உருவாகும் இத்திரைப்படத்தின் முதல் பாகம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது.

கார் மீது ஏறி வழிவிட ரசிகர்களுக்கு நடிகர் ஆதி கோரிக்கை
திருவாரூரில் நடிகர் ஹிப் ஹாப் ஆதியை சந்திக்க ரசிகர்கள் திரையரங்கில் திரண்டனர். அவரது கார் வந்தபோது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால், பாதுகாப்பு காரணமாக சிறிது நேரம் அங்கிருந்து சென்ற ஆதி, பின்னர் திரும்பி வந்தார். கூட்டம் வழிவிடாததால் காரின் மீது ஏறி ரசிகர்களுக்கு கையசைத்து வழிவிடுமாறு கோரிக்கை வைத்தார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved