news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews கோலிவுட் நியூஸ் தமிழ்
tv

Also Watch

tv

Read this

கோலிவுட் நியூஸ் தமிழ்

Cinema news

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தமிழ் சினிமா

அல்லு அர்ஜுனின் 25வது படத்தை இயக்கும் பேசில் ஜோசப் :

நடிகர் அல்லு அர்ஜுனின் 25வது படத்தை, மலையாள நடிகரும், இயக்குநருமான பேசில் ஜோசப் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் சக்திமான் கதையை தழுவிய சூப்பர்ஹீரோ திரைப்படமாக இருக்கலாம் என்றும், ஏப்ரல் 8ஆம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

ரு.4,000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'ராமாயணம்' திரைப்படம் :

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ராமாயணம் திரைப்படத்தின் 2ஆவது கிளிம்ப்ஸ் வீடியோவை வரும் ஏப்ரல் 2-ம் தேதி படக்குழு வெளியிடுகிறது. சுமார் 4 ஆயிரம் கோட ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இத்திரைப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்வீர் கபூரும், ராவணனாக யஷும் நடிக்கின்றனர். சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கிறார்.

'சூர்யா 48' திரைப்படத்தை இயக்கும் ஹெச்.வினோத் :

ஜனநாயகன் திரைப்பட இயக்குநர் ஹெச்.வினோத் அடுத்ததாக சூர்யாவின் 48ஆவது திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை Zhagaram Studios நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் 'சூர்யா 47' படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்ற பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படம் உருவாகிறது.

”உயிருள்ளவரை உஷா” பட பாடல்கள் - டி. ராஜேந்தர் வழக்கு :

உயிருள்ளவரை உஷா திரைப்படத்தின் பாடல்களை, பதிப்புரிமையை மீறி வர்த்தக ரீதியாக பயன்படுத்த ஏ.வி.எம். மற்றும் டபிள்யூ.எல். எபிக் நிறுவனங்களுக்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி டி. ராஜேந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

பதிப்புரிமை ஏவிஎம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், அது பல நிறுவனங்களுக்கு கைமாறியுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related Link
பிரதீப் ரங்கநாதன் முதல் தாய் கிழவி வரை

பிரதீப் ரங்கநாதன் முதல் தாய் கிழவி வரை




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

3000ற்கும் மேற்பட்டவர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

0
5 mins agoshare
சேலம் முருகன் கோவில்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved