news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஒரு முறை இல்லை, பலமுறை வருவதுதான் காதல்
tv

Also Watch

tv

Read this

ஒரு முறை இல்லை, பலமுறை வருவதுதான் காதல்

தமன்னா

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நடிகை தமன்னா

காதல் குறித்து மனம் திறந்த நடிகை தமன்னா :

ஒரு முறை மட்டுமல்ல பல முறை வருவதற்கு பெயர் தான் காதல் எனவும், இன்றைய காலகட்டத்தில் காதல் என்றால் என்ன, உறவு என்றால் என்ன என்பதில் பலர் குழப்ப மடைந்துள்ளதாகவும் நடிகை தமன்னா தெரிவித்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், காதல் ஒரு வியாபாரமாக மாறும் அபாயம் உள்ளதாக கூறினார்.

ரூ.200 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்த்த 'LIK' :

'LIK' திரைப்படம் 200 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என எதிர்பார்த்து காத்திருந்ததாகவும்,100 கோடி ரூபாய் வசூலை கூட தொடாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும் இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறினார். திரையரங்கில் 'LIK' நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூலில் மைல் கல்லை எட்டாத நிலையில், எங்கோ ஒன்று சரியாக பொருந்தவில்லை என கருத்து தெரிவித்தார்.

‘பூத் பங்களா’ திரைப்படம் 23 நாட்களில்ரூ.253 கோடி வசூல் :

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘பூத் பங்களா’ திரைப்படம் 23 நாட்களில் உலகளவில் 253 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நகைச்சுவை, திகில், த்ரில், சஸ்பென்ஸ் கலவையாக உருவான ‘பூத் பங்களா’ திரைப்படம் கடந்த 16-ந் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் ஆகியோர் நடிக்கும் ராமாயணா :

ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் ஆகியோர் நடிக்கும் ராமாயணா திரைப்படத்தில், ரகுல் ப்ரீத் சிங் சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார்.அவர் ஏற்கனவே இந்த கதாபாத்திரத்திற்கான look test-ஐ முடித்துவிட்ட நிலையில், தற்போது படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

2 பாகங்களாக உருவாகும் ராமாயணா திரைப்படத்தின் முதல் பாகம், வரும் தீபாவளி பண்டிகையன்று வெளியாகிறது.

ஜெய் நடித்தும் ‘சட்டென்று மாறுது வானிலை’ படம் : 

ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சட்டென்று மாறுது வானிலை’ திரைப்படத்தின் ‘உயிரே உயிரே’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாபு விஜய் தயாரித்து, இயக்கும் இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன், யோகிபாபு, கேஜிஎப் புகழ் கருடா ராம், ஸ்ரீமன், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Related Link
எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

               


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஷ்பு மக்களின் திருமணம் - மொத்தமகா ஒரே தீமில் வந்த சினிமா ஸ்டார்ஸ்

0
1 min agoshare
kushbhu daughter wedding








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau