Also Watch
Read this
By: Manigandan Raja

திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
நடிகர் ரஜினிகாந்த், "மண்டாடி" திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் சூரியையும், படக்குழுவினரையும் தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து, அவருடைய வார்த்தைகள் தனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம் என நடிகர் சூரி பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் கடந்த 10-ம் தேதி வெளியான இந்த படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இந்த படத்தை பார்த்த பல திரை பிரபலங்களும் சூரியையும், படக்குழுவையும் பாராட்டி வருகின்றனர்.
"டோரதி" திரைப்படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியீடு
"டோரதி" திரைப்படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாக உள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ரிஷிகாந்த், சனத், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படம் சமீபத்தில் டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
மூக்குத்தியம்மன் 2 திரைப்படத்தின் டீசர் வெளியீடு
நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள மூக்குத்தியம்மன் 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மஹாசக்தி என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved