Also Watch
Read this
By: Manigandan Raja

கருப்பு படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகை அனகா :
கருப்பு படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை அனகா, சூர்யாவுடனான முதல் சந்திப்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு மம்முட்டி- ஜோதிகா நடிப்பில் உருவான காதல்: தி கோர் ((Kaathal: The Core )) படப்பிடிப்பு தளத்திற்கு சூர்யா வந்த சமயத்தில், தனக்கு சூட்டிங் இல்லாததால் வீட்டிலேயே இருந்ததாகவும், அவரை பார்க்க முடியவில்லையே என வருத்தப் பட்டதாகவும் நிகழ்ச்சி ஒன்றில் அனகா கூறினார்.
Toxic முழுக்க முழுக்க கமர்ஷியல் படம் :

Toxic திரைப்படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் திரைப்படம் என்றும், தான் நடித்த படங்களிலேயே வித்தியாசமானது எனவும் நடிகை கியாரா அத்வானி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
இயக்குநர் Geethu Mohandas தன்னிடம் கதையை கூறியபோது, அதிலிருந்த உறவுகளும், உணர்வுகளும் சிக்கலானதாக இருந்தாலும், அவை உண்மையானதாகவும் இயல்பானதாகவும் தோன்றியதாக தெரிவித்திருக்கிறார்.
அரசன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் யோகலட்சுமி :

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் அரசன் படத்தில், நடிகை யோகலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை யோகலட்சுமி, சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் பேசிய போது, அரசன் படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
டார்கேரியன் உள்நாட்டுப் போரின் தீவிரத்தை காட்டு டிரெய்லர் :
House of the Dragon' தொடரின் மூன்றாவது சீசனுக்கான இறுதி முழு நீள டிரெய்லரை HBO வெளியிட்டுள்ளது. டார்கேரியன் உள்நாட்டுப் போர் மேலும் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் சூழலில், தீவிரமான போர்கள்.
அரசியல் துரோகங்கள் மற்றும் பெருகிவரும் ரத்தக் களரிகளை இந்த டிரெய்லர் உறுதிப்படுத்தியுள்ளது. 'House of the Dragon' தொடரின் மூன்றாவது சீசன், ஜூன் 21, ஞாயிற்றுக்கிழமையன்று HBO மற்றும் HBO Max தளங்களில் வெளியாகிறது.
தன் கதாபாத்திரம் மிகவும் கலகலப்பாக இருக்கும் :
Peddi திரைப்படம், ஒருவரின் இருப்பு மற்றும் அடையாளம் பற்றியது என தெரிவித்த நடிகை ஜான்வி கபூர், இதில் தன் கதாபாத்திரம் மிகவும் கலகலப்பாக இருக்கும் என கூறினார்.
புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படம் அடுத்த மாதம் 4ம் தேதி வெளியாகிறது. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் Peddi திரைப்படத்திற்கு
ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved