Also Watch
Read this
By: Manigandan Raja

படத்திற்கு "ஜாக்கி" என பெயரிடப்பட்டுள்ளது
துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஜாக்கி’ என பெயரிடப்பட்டுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர்கள் பிருத்வி பாண்டியராஜ், சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
துருவ் விக்ரமும், மைத்ரி மூவி மேக்கர்ஸும் முதல் முறையாக இணைவதால், இந்த படம் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நடிகர் விக்ரம் நடிக்கும் "சியான் - 63" திரைப்படம்
நடிகர் விக்ரம் நடிக்கும் "சியான் - 63" திரைப்படத்தின் டைட்டில் விநாயகர் சதுர்த்தியான இன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம் பெரிய பட்ஜெட்டில் முழு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது.

படத்தில், ரியா ஷிபு, எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்காக உடலை கட்டுமஸ்தாக மாற்றும் முயற்சியில் இருப்பதால் விக்ரம் தீவிரமாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
"லெனின் பாண்டியன்" திரைப்படத்தின் முன்னோட்ட விழா
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் நடிக்கும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் முன்னோட்ட விழா நடைபெற்றது. விழாவில், இசைஞானி இளையராஜா மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்த படத்தில் நடிகை ஸ்ரிதா ராவ் கதாநாயகியாக நடிக்க, கங்கை அமரன், நடிகை ரோஜா உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved