news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews எதிர்ப்பு தெரிவித்த விஷாலுக்கு ராகவா லாரன்ஸ் பதிலடி
tv

Also Watch

tv

Read this

எதிர்ப்பு தெரிவித்த விஷாலுக்கு ராகவா லாரன்ஸ் பதிலடி

ராகவா லாரன்ஸ்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை ஒதுக்கீடு

அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை ஒதுக்கீடு :

தமிழகத்தில் திரைப்படத் துறைக்கு அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட ராஜ்மோகனுக்கு நடிகர் விஷால் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் ராகவா லாரன்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் முதலமைச்சர் விஜய், நிச்சயமாக இந்த முடிவை ஆழமாக யோசிக்காமல் எடுத்திருக்க மாட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, அவசரப்பட்டு எதிர்வினையாற்றுவதை விட, சிறிது கால அவகாசம் கொடுப்போம் என்றும், திரைப்படத் துறையினரின் நலனுக்காக அமைச்சர் ராஜ்மோகன் தனது பங்களிப்பை வழங்குவார் என்றும் தெரிவித்துள்ளார்.

சேயோன் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம் :

தாய் கிழவி திரைப்படம் மூலம் பிரபலமான சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று தொடங்குகின்றன. கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் பாக்யஸ்ரீ போர்சே தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு கமர்சியல் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள பிளாஸ்ட் திரைப்படம் :

ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள பிளாஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கி உள்ளார்.

இதில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'கே.ஜி.எஃப்' புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசை அமைத்தன் மூலம் தமிழில்
அறிமுகமாகி உள்ளார். இப்படம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜீத்து ஜோசப்-மோகன்லால் கூட்டணியில் த்ரிஷ்யம்-3 : 

ஜீத்து ஜோசப்-மோகன்லால் கூட்டணியில் உருவாகியுள்ள த்ரிஷ்யம்-3 திரைப்படத்தின் 'இனி வருமோ' பாடலின் லிரிக்கல் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. முதல் இரண்டு பாகங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், மூன்றாம் பாகத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உலகெங்கும் வரும் 21ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் ராம்சரணின் 'PEDDI' :

புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள 'PEDDI' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் இன்று நடைபெறும் நிலையில், சிறப்பு வீடியோவை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ள 'PEDDI', வரும் ஜூன் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Link
உண்மையான சிறுத்தை பல் பதித்த செயின்தான் என்பது உறுதி

உண்மையான சிறுத்தை பல் பதித்த செயின்தான் என்பது உறுதி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்

0
13 mins agoshare
ட்ரோன் தாக்குதல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved