Also Watch
Read this
By: Manigandan Raja

திரைப்படத்தின் 12 பாடல்கள் அடங்கிய ஆல்பம் வெளியீடு
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் பாடல் ஆல்பம் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களையும் வெளியிட்டுள்ளனர். இதில், 6 பாடல்களை சூப்பர் சுப்பு எழுதியுள்ளார்.
இந்த படத்தின் டிரெய்லர் வரும் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முதல் பாகத்தை போலவே 2-ம் பாகத்திலும் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆண்டுதோறும் வெள்ளித் திரை, சின்னத் திரை விருதுகள்
வெள்ளித் திரை மற்றும் சின்னத் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி.

சென்னை அடையாறு மணிமண்டபத்தில் உள்ள அவரின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், சிவாஜி கணேசன் பெயரில் விருதுகள் வழங்க விரைவில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில், நடிகர்கள் பிரபு, நாசர் மற்றும் சிவாஜி கணேசன் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் "மிஸ்டர் பாரத்" திரைப்படம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் "மிஸ்டர் பாரத்" திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

ஜி ஸ்குவாட், ஃபேஷன் ஸ்டூடியோஸ், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் மூலம் யூடியூபில் பிரபலமான நிரஞ்சன் இயக்குநராக அறிமுகமாகிறார். "ஃபைனலி" யூடியூப் சேனல் புகழ் பாரத் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved