ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் 6 நாட்களில் 541 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ரஜினிகாந்த், வித்யா பாலன், ஹ்ரித்திக் ரோஷன், மோகன்லால், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, சிவராஜ்குமார், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான இப்படம் கொட்டும் மழையிலும் விடாமல் வசூலை அள்ளுகிறது.
ராமாயணம் படத்திற்கான முன்பதிவு ஒரே நாளில் ரூ.4.88 கோடியை தாண்டியது
ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ராமாயணம் நவம்பர் 5 ம் தேதி வெளியாக உள்ள நிலையில் திரைப்படத்திற்கான முன்பதிவு ஒரே நாளில் 4.88 கோடி ரூபாயைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.
முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் இந்தியா முழுவதும் சுமார் 85 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. மும்பை பிவிஆர் ஐகான் திரையரங்கில் ஐமேக்ஸ் 3டி காட்சிகளுக்கான ரெக்லைனர் இருக்கைகளின் டிக்கெட் ஒன்றின் விலை 2 ஆயிரத்து 770 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.