news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews அரசன் படப்பிடிப்பில் சமுத்திரக்கனி பிறந்தநாள் கொண்டாட்டம்
tv

Also Watch

tv

Read this

அரசன் படப்பிடிப்பில் சமுத்திரக்கனி பிறந்தநாள் கொண்டாட்டம்

அரசன்

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சமுத்திரக்கனி பிறந்தநாள்

குணா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி :

அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பின் போது சமுத்திரக்கனியின் பிறந்ததாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வட சென்னையை போன்று அரசனிலும் சமுத்திரக்கனி குணா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் வெற்றிமாறன், சிம்பு மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிக ரூ.100 கோடி வசூல் படங்களை கொடுத்த அக்சய் குமார் :

இந்திய சினிமா வரலாற்றிலேயே 20 திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலித்த நடிகர் என்ற பெருமையை பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார் தனதாக்கினார். அக்சய் குமாரின் Bhooth Bangla திரைப்படம் 100 கோடி ரூபாயை கடந்து திரையரங்குகளில் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பட்டியலில் அடுத்ததாக சல்மான் கானின் 18 திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ளது. கோலிவுட்டை பொறுத்தவரை ரஜினி மற்றும் விஜயின் தலா 8 திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலை தொட்டு சாதனை படைத்துள்ளது.

எம்.எஸ்.சுப்பு லட்சுமியின் வாழ்க்கை வரலாற்று படம் :

புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்பு லட்சுமியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் சாய் பல்லவிக்கு பதில் காந்தாரா நாயகி ருக்மினி வசந்த் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அது வதந்தி என தகவல் வெளியாகியுள்ளது.

சாய் பல்லவி தற்போது ராமாயணா படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால், எம்.எஸ். சுப்பு லட்சுமியின் BIO-PIC.ல் நடிக்க மாட்டார் என செய்திகள் வெளியானது. நானி-யின் ஜெர்சி திரைப்படத்தின் மூலம் பிரபலமான கௌதம் தின்னனுரி இப்படத்தை இயக்குகிறார். அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க திட்டம் :

திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்கவுள்ளதாகவும், அதே போன்று இயக்குநராக தொடர்வேன் எனவும் 'TOURIST FAMILY' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். தான் அடுத்ததாக இயக்கவுள்ள திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அபிஷன் ஜீவிந்த்-அனஸ்வரா ராஜன் நடிப்பில் கடந்த பிப்ரவரியில் வெளியான 'WITH LOVE' திரைப்படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மதுபாட்டிலுக்கு ரூ.10, துண்டு துண்டான செயின், அதிர்ச்சி வீடியோ

3
9 mins agoshare
மதுபாட்டிலுக்கு ரூ.10, துண்டு துண்டான செயின், அதிர்ச்சி வீடியோbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved