news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஸ்ரேயா - விமல் நடித்த "சண்டக்காரி" திரைப்படம்
tv

Also Watch

ஸ்ரேயா - விமல் நடித்த "சண்டக்காரி" திரைப்படம்

இயக்குநர் மாதேஷ்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சண்டக்காரி

திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பு

ஸ்ரேயா - விமல் நடித்த சண்டக்காரி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் உருவான மை பாஸ் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக, கடந்த 2019-ம் ஆண்டு இயக்குநர் மாதேஷ் இயக்கத்தில் உருவான இந்த படம், சில காரணங்களுக்காக 6 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்தது.

இந்த சூழலில், வரும் 18-ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் ஸ்ரீநாத் பாஸி நடிக்கும் புதிய திரைப்படம்

மஞ்சுமல் பாய்ஸ் திரைப்பட நடிகர் ஸ்ரீநாத் பாஸி நடிக்கும் ‘பிரியத்தமன்’ திரைப்படத்தின் தலைப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. ஷ்ரேயா நிதி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், கிருஷ்ணா பூஜப்பூரா எழுதிய கதையை, ரெஜி பிரபாகரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக தேஜ லஷ்மி நடித்துள்ளார்.

இந்த படம் குறித்த புதிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்மையை கொண்டாடும் பிரியங்கா தேஷ்பாண்டே

தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, தமது கர்ப்பகால புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த ஆண்டு வசியை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர், ஜூன் மாதம் தான் கர்ப்பமானதை அறிவித்திருந்தார்.

தற்போது கர்ப்பமான வயிற்றுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில், அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏராளமான லைக்குகள் குவிந்து வருகின்றன.


Related Link
மகன் படத்துக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ள அப்பாவின் படம்

மகன் படத்துக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ள அப்பாவின் படம்

               


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரேபிடோ நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved