முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயின் “சிக்மா” திரைப்படத்தின் 4-வது பாடல் இன்று இரவு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜாபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இந்த படத்தில் கேத்ரின் தெரசா ஒரு துள்ளலான பாடலில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள "பத்தா" திரைப்படம்
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் ‘ஊரோட ஒத்த டான்’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்த படத்தை இயக்குநர் அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’, ‘ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 - சினி1 ஸ்டுடியோஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாகிறது.