Also Watch
Read this
By: Manigandan Raja

லோகேஷ் படத்தின் சூப்பர் அப்டேட்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி உள்ளிட்டோர் நடிக்கும் 'டிசி' படத்தின் ட்ரெய்லர் கடந்த மே மாதம் வெளியாகியிருந்துச்சு. ட்ரெய்லர் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிச்சுனே சொல்லலாம். இந்த நிலையில், 'டிசி' படம் இந்த மாதம் இறுதியில், அதாவது ஜூலை 31-ம் தேதி வெளியாகும்னு படக்குழு அதிகாரப்பூர்வமா அறிவிச்சிருக்காங்க.
அதே மாதிரி, இந்த படம் தமிழைத் தாண்டி தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியாகவுள்ளதாகத் தெரிவிச்சிருக்காங்க. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறாரு. அதேமாதிரி, இந்த படம் மூலம் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியானது Toxic பட புதிய க்ளிம்ப்ஸ்

மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, தாரா சுதாரியா, ஹூமா குரேஷி, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் நடிப்பில் தயாரான Toxic படத்தின் புதிய க்ளிம்ப்ஸ் வெளியாகிருக்குகிறது. இதில், நடிகை நயன்தாரா கெத்தா பைக்கை ஓட்டிட்டு வராங்க.
அதுமட்டுமல்லாம மத்த நடிகைகளும் அவங்களோட அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திருக்காங்க. இந்த Toxic படம் வருகிற ஆகஸ்ட் 26ம் தேதி வெளியாக இருக்கிறது. அதே மாதிரி, இந்த படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும்னு படக்குழு அறிவிச்சிருக்காங்க..
இதயம் முரளி படத்தின் புதிய பாடல்

ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் 'இதயம் முரளி' படத்தில் இருந்து 'கட்டழகி' என்ற வீடியோ பாடல் வெளியாகிருக்கு. இந்த படத்தில், அதர்வா முரளி, கயாடு லோஹர், பிரீத்தி முகுந்தன், நடராஜன் சுப்ரமணியம், ஃபஹத் பாசில், பிரக்யா நக்ரா இவர்களுடன் யூடியூப் பிரபலம் சுதாகர் ஜெயராமன், திராவிட செல்வம் உள்ளிட்டோர் நடித்திருக்காங்க.
தமன் இசையமைத்துள்ள இந்த படம் வருகிற ஜூலை 10-ம் தேதி வெளியாகிறது. அதே மாதிரி இந்த படம் மூலம் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநரா அறிமுகமாகிறாரு என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் திரைக்கு வரும் 'ரன்'

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான 'ரன்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுருந்துச்சு. இதனாலையே இந்த படம் 2002-ம் ஆண்டின் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டுச்சு. காதல், ஆக்சன், குடும்ப உணர்வுகள் என அனைத்தையும் இணைத்து உருவான இந்த படத்தின் ரீ-ரிலீஸ் குறித்து கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டிருந்துச்சு.
ஆனா, சில காரணங்களால் கடந்த ஆண்டு வெளியாகாமல் தள்ளிப் போய்ருந்துச்சு. இந்த நிலையில் வருகிற ஜூலை 10-ம் தேதி 'ரன்' படம் ரீ-ரிலீஸ் ஆகும்னு தகவல் வெளியாகிருக்கு.
"ஜெயிலர்-2" திரைப்படத்தில் பாலிவுட் நடிகர்

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் -2' திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகிருக்கு. அவரது கேமியோ காட்சிகள் எதிர்பார்த்ததை விட மிகவும் சிறப்பாக வந்திருப்பதால், அவரது திரைநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இது தவிர, முதல் பாகத்தை போலவே, இந்த படத்திலும் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் சிறப்புத் தோற்றங்களில் நடித்து வருவதாகக் சொல்றாங்க. அதே மாதிரி தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகிருக்கு.
6 நாட்களில் Con City திரைப்படம் செய்த வசூல்

இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், மலையாள நடிகை அன்னா பென், யோகி பாபு, விடிவி கணேஷ், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்த Con City திரைப்படம் கடந்த ஜூன் 26-ம் தேதி வெளியாகிருந்துச்சு. படம் வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வந்த இந்த திரைப்படம் வெளியான 6 நாட்களில் செய்துள்ள வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ. 6.9 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.