Also Watch
Read this
By: Manigandan Raja

சூர்யா- ஜோதிகா திருமண வாழ்க்கை குறித்து பேசிய காணொலி
தங்களது 20-வது ஆண்டு திருமண நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து காணொலி வெளியிட்டுள்ளார். அதில், சூர்யா- ஜோதிகா தங்களது திருமண வாழ்க்கை குறித்து பேசிய காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
காதலின் நினைவுகளை பிரதிபலிக்கும் வகையில் ஸ்காட்லாந்தை தேர்வு செய்ததாகவும், அங்குள்ள மக்களின் அன்பும் அரவணைப்பும் தங்களது இதயத்தில் என்றும் நிலைத்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
லப்பர் பந்து திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு
லப்பர் பந்து’ திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தாங்கள் கற்பனை செய்ததைக் காட்டிலும் மிகப் பெரிய வாழ்க்கையை ‘லப்பர் பந்து’ திரைப்படத்திற்கு நீங்கள் அனைவரும் கொடுத்ததாக கூறி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
ராஷ்மிகா மந்தனாவின் மைசா திரைப்படம் நவம்பர் 27-ல் வெளியீடு
நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள ‘மைசா’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆக் ஷன், திரில்லம் நிறைந்த இப்படம், நவம்பர் 27-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு, ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

போஸ்டரில் ராஷ்மிகா ஆக்ரோஷமான தோற்றத்தில், கையில் ரத்தக்கறை படிந்த ஈட்டியுடன் இடம்பெற்றுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved