Also Watch
Read this
By: Manigandan Raja

வதந்தி தொடரின் 2-ஆம் பாகத்தில் நடிக்கிறார் சசிகுமார்
வதந்தி தொடரின் 2-ஆம் பாகத்தில் சசிகுமார் லீட் ரோலில் நடிப்பதாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம், ஃபஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது
கடந்த 2022ம் ஆண்டில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, லைலா, சஞ்சனா, நாசர் ஆகியோர் நடிப்பில் வெளியான முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக உருவாகும் 2-ஆம் பாகத்தை வால் வாட்சர் பிலிம்ஸ் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ளனர்.
அனிருத்தின் துள்ளலான இசைக்கு ரசிகர்கள் வரவேற்பு

அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வமிகா கப்பி, சஞ்சனா நடிப்பில் உருவாகியுள்ள 'DC' திரைப்படத்தின் ஆடியோ பாடல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அனிருத்தின் துள்ளாலான இசை ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. யூடியூப், SPOTIFY, APPLE MUSIC உள்ளிட்ட தளங்களில் பாடல்கள் கிடைக்கிறது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved