Also Watch
Read this
By: Manigandan Raja

அனிருத், வேடன் ஆகியோர் இணைந்து பாடியுள்ள பாடல்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள "டிசி" திரைப்படத்தின் "பூம் பா டிக டிகா" பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இசையமைப்பாளர் அனிருத், பாடகர் வேடன் ஆகியோர் இணைந்து பாடியுள்ள இந்த பாடலை ஹெய்ஸன்பர்க் மற்றும் வேடன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
புதிய திரைப்படம் குறித்து இயக்குநர் சுசி கணேசன் அறிவிப்பு

இயக்குநர் சுசி கணேசன், தனது புதிய திரைப்படத்துக்கு "ஒரண்ட" என்று பெயரிட்டுள்ளது தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது. கதை என்ன, நடிகர், நடிகைகள் யார்... தொழில்நுட்ப கலைஞர்கள் யார்... ஃபர்ஸ்ட் லுக் எப்போது... டீசர் எப்போது.
என எந்த விவரத்தையும் வெளியிடாமல், வெறும் தலைப்பை மட்டும் வெளியிட்டுள்ளது சமூகவலைதளங்களில் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் 85 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved