news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews இன்றைய சினிமா அப்டேட்ஸ்
tv

Also Watch

இன்றைய சினிமா அப்டேட்ஸ்

Vijay Devarakonda

27

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இன்றைய சினி நியூஸ்

டொவினோ தாமஸ் நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் : 

டொவினோ தாமஸ் நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ள படத்தில் கயாடு லோஹர் நாயகியாக நடித்துள்ளார்.

1950 காலத்தில் நடைபெறும் கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் வரும் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

லீடர் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு :  

லெஜண்ட் சரவணன் நடித்துள்ள லீடர் திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் வெறும் மூன்றரை கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. துரை செந்தில் குமார் இயக்கத்தில் கடந்த 3-ம் தேதி இப்படம் வெளியானது.

சரவணனின் அசுர நடிப்பு மற்றும் விறுவிறுப்பான கதைக்களம் காரணமாக மக்களிடம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தும் வசூல் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

சேஷ் - மிருணாள் தாகூர் கூட்டணியில் "டகோயிட்" படம் : 

தெலுங்கு நடிகர் சேஷ் மற்றும் மிருணாள் தாகூர் கூட்டணியில் உருவாகியுள்ள ”டகோயிட்” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது..! ஷானெல் தியோ இயக்கத்தில் ஆக்சன் காதல் கதைக்களத்தில் இப்படம் உருவாகி உள்ளது.

இந்த படம் அடுத்த வரும் 10-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

படங்களின் தேர்வு குறித்து மிருணாள் தாகூர் கருத்து : 

சில படங்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்தாலும், கதை பிடிக்கவில்லை என்றால் கனத்த இதயத்துடன் வேண்டாம் என்று சொல்லி விடுவேன் என நடிகை மிருணாள் தாகூர் கூறியுள்ளார்.

படங்களின் தேர்வு குறித்து மனம் திறந்து பேசிய அவர், சீதா மகாலட்சுமி, யஷ்னா ஆகிய கதாபாத்திரங்கள் தனது திரைப் பயணத்தின் மைல்கற்கள் என்றும், அது போன்ற கதாபாத்திரங்களுக்காக காத்திருப்பதாகவும் கூறினார்.

ராஷ்மிகா மந்தனாவுக்கு விஜய் தேவரகொண்டா பிறந்தநாள் வாழ்த்து : 

தனது மனைவி ராஷ்மிகா மந்தனாவுக்கு விஜய் தேவரகொண்டா வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.ராஷ்மிகாவின் 30ஆவது பிறந்தநாளை ஒட்டி ரணபாலி படத்தில், ஜெயம்மா என்ற கதாபாத்திரத்துக்கு அவர் தயாரான வீடியோவை விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ளார்.

Related Link
இன்றைய சினிமா தகவல்கள்

இன்றைய சினிமா தகவல்கள்





SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி பாலியல் வழக்கில் திருப்பம்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved