Also Watch
Read this
By: Manigandan Raja

முன்பதிவு தொடங்கி டிக்கெட் விற்பனை விறுவிறு :
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கர' திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 41 நிமிடங்கள் என தெரிகிறது. திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், முன்பதிவு தொடங்கி டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
போர் தொழிலில் நடிக்க முதலில் அர்ஜூனை அணுகினேன் :

'போர் தொழில்' படத்தில் சரத்குமார் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் நடிகர் அர்ஜூனை அணுகியதாகவும், அவர் நடிக்க முடியாமல் போனதால் சரத்குமாரை அணுகியதாகவும் இயக்குநர் விக்னேஷ் ராஜா கூறினார். அஷோக் செல்வனை நினைவில் வைத்து தான் கதை எழுத ஆரம்பித்ததாகவும் அவர் கூறினார். கடந்த 2023ஆம் ஆண்டு கிரைம் ஜானரில் வெளியான ' போர் தொழில்', விக்னேஷ் ராஜாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
அக்சய்குமார் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் :

அக்சய்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் உள்ள கல்லூரியில் நடந்த சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆன்லைன் மூலம் தனது 13 வயது மகளுக்கு நடந்த பாலியல் தொல்லை பற்றி பேசினார்.
தனது மகள் ஆன்லைன் கேம் விளையாடியபோது அதன் மூலம் அறிமுகமான நபர் அவளிடம் நிர்வாண படத்தை அனுப்புமாறு கேட்டதாக கூறியிருந்தார். இது குறித்து விசாரணை நடத்திய சைபர் குற்றப்பிரிவு போலீசார், தற்போது பாலியல் தொல்லை கொடுத்த நபரை கண்டறிந்து கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.