ஒரே சந்திப்பில் விஜய் சார் பிடித்துவிட்டார் - விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும், தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்ததை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
ஒரே ஒரு சந்திப்பிலேயே விஜய் சார் தனக்கு மிகவும் பிடித்தமானவராக மாறிவிட்டார் என விஜய் தேவரகொண்டாவும், தற்போது முதலமைச்சராக இருக்கும் விஜய் சாரை வியந்து பார்ப்பதாக ராஷ்மிகா மந்தனாவும், பதிவிட்டுள்ளனர்.
"ஜெயிலர் -2" திரைப்படத்தில் ரஜினிகாந்த் வைத்த கோரிக்கை
"ஜெயிலர் 2" திரைப்படத்தில் ஒரு பாடலுக்காவது நடிகை தமன்னாவை நடனமாட வைக்கும்படி ரஜினிகாந்த் விடுத்த கோரிக்கையை இயக்குநர் நெல்சன் நிராகரித்து விட்டாராம்.
இதுகுறித்து பேசிய ரஜினிகாந்த், தமன்னா நடனமாட கேட்டது தனது சொந்த விருப்பத்திற்காக அல்ல எனவும், ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதற்காகவே கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடிக்கும் "சீன்" திரைப்படம்
சூர்யா நடிக்கும் "சீன்" திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி வெளியாகவுள்ளது.