Also Watch
Read this
By: Manigandan Raja

கிறிஸ்டோபர் நோலனின் பிரம்மாண்ட படைப்பு "The Odyssey" :

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன், அவரது அடுத்த பிரம்மாண்ட படைப்பான "The Odyssey" படத்தின் நீட்டிக்கப்பட்ட காட்சியை லாஸ் வேகாஸில் நடைபெற்ற CinemaCon 2026 விழாவில் வெளியிட்டார். இப்படம் முழுமையாக IMAX கேமராக்களில் படமாக்கப்பட்டு, ஜூலை 17-ஆம் தேதியன்று திரைக்கு வரவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்திய சினிமா அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது :

உலக அரங்கில் இந்திய சினிமா அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளதாக, "கேஜிஎஃப்" புகழ் நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த சினிமா விழாவில் பேசிய அவர், இந்தியா ஒரு தனி உலகம் போல உள்ளதாகவும், டப்பிங் மற்றும் பான் இந்தியா கதைகள் மூலம் அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள பார்வையாளர்களை இணைக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் கூறினார்.
விஜய்யின் "ஜனநாயகன்" திரைப்பட கசிவு விவகாரம் :

விஜய்யின் "ஜனநாயகன்" திரைப்பட கசிவு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகள் 3 பேரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். திரைப்படத்தை உடனே பார்க்கும் ஆசையில், ஃப்ரீலென்ஸ் எடிட்டர் ஒருவர் திரைப்படத்தை திருடி பார்த்ததோடு, தனது நண்பர்களுக்கும் அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved