Also Watch
Read this
By: Manigandan Raja

பேரரசு இயக்கத்தில் 2005-ல் வெளியாகி ஹிட் அடித்த படம்
பேரரசு இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான திருப்பாச்சி திரைப்படம் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
கில்லி வெற்றிக்குப் பிறகு விஜய்-த்ரிஷா கூட்டணியில் வெளியான திருப்பாச்சி படமும் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என முதல்வர் விஜய் அறிவித்துள்ளதால், ரீ-ரிலீஸ் படங்களைத்தான் கொண்டாட முடியும் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இளன் நாயகனாக அறிமுகமாகும் 'பியார் பிரேமா கல்யாணம்'
இயக்குநர் இளன் கதாநாயகனாக அறிமுகமாகும் 'பியார் பிரேமா கல்யாணம்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'மாப்பிள்ளை சிங்கம்' நெட் பிளிக்ஸில் வெளியானது. இளன் எழுதிய இப்பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

முதல் பாடலான அட்ராசிட்டி சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. கதாநாயகன் இளனே இயக்கியுள்ள இத்திரைப்படம் நேரடியாக வரும் 21ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved