news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews 'ஆமா, நான் கர்ப்பமாக தான் இருக்கேன்..'
tv

Also Watch

tv

Read this

'ஆமா, நான் கர்ப்பமாக தான் இருக்கேன்..'

சமந்தா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சமந்தா

சிறிய மகப்பேறு இடைவேளை எடுக்க போறேன்னு.." என்று தெரிவித்துள்ளார் : 

இயக்குநர் பி.வி. நந்தினி ரெட் இயக்கத்தில் 'மா இன்டி பங்காரம்' திரைப்படம் கடந்த ஜூன் 19-ம் தேதி வெளியாகிருந்துச்சு. வெளியான முதல் நாளிலேயே உலகளவில் இந்த படம் ரூ.10.70 கோடியை வசூலித்திருந்துச்சு.

இந்த வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிருந்தாங்க. அப்போ, "சமந்தாவோட உடல் அமைப்பில் மாற்றம் இருப்பதாகவும், அவர் கர்ப்பமாகி இருப்பார்" என்று இணையத்தில் தகவல்கள் பரவி வந்தது.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த 'மா இன்டி பங்காரம்' திரைப்பட வெற்றி விழாவில் பேசிய நடிகை சமந்தா, "தற்போது தன்னுடைய தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் மிகவும் சிறப்பான காலகட்டத்தை அனுபவித்து வருகிறேன் என்றும் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள பணிகளை முடித்த பிறகு, "சிறிய மகப்பேறு இடைவேளை எடுக்க போறேன்னு " என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் சமந்தா கர்ப்பம் குறித்த பரவிய தகவல் உறுதியாகியுள்ளது.

அந்த ஒரு ஷாட்டுக்காக 90+ டேக்குகள் எடுத்தோம் : 

சமீபத்திய நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் வாரணாசி திரைப்படத்தின் படப்பிடிப்பு அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், "வாரணாசி படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக நானும் மகேஷ் பாபுவும் காலை முதலே படப்பிடிப்பில் ஈடுபட்டோம். ஆனால் அந்த காட்சியை அன்றைய தினம் முழுமையாக முடிக்க முடியவில்லை.

அதனால் படப்பிடிப்பு அடுத்த நாளும் தொடர்ந்தது. அந்த ஒரு ஷாட்டுக்காக மட்டும் இயக்குநர் ராஜமௌலி 90-க்கும் மேற்பட்ட டேக்குகள் எடுத்தார்" என்று கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

வெளியானது 'ராம் இன் லீலா' படத்தின் முதல் பாடல் : 

அறிமுக இயக்குனர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ரியோ ராஜ், வர்திகா உள்ளிட்டோர் நடிக்கும் 'ராம் இன் லீலா' படத்தின் முதல் பாடலான 'யார் யாரிவள்' பாடல் வெளியாகிருக்கு. இந்த பாடலில், "ஒரு பெண்ணின் கண்களை முதன்முதலாக காதலுடன் பார்க்கும் காதலனின் உணர்வை மெல்லிசையுடன் விவரிக்கிறது.

இந்த திரைப்படத்திற்கு அங்கித் மேனன் இசையமைத்திருக்கிறார். அதேமாதிரி இந்த படம் ஃபீல் குட் லவ் என்டர்டெய்னராக தயாராகிருக்கு. 'ஜோ', 'ஆண்பாவம் பொல்லாதது' ஆகிய இரண்டு திரைப்படங்களின் வணிக ரீதியான வெற்றிக்குப் பிறகு நடிகர் ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' படம் மக்களை எந்த அளவுக்கு கவரும் அப்டிங்கறத நம்ம பொறுத்திருந்து தான் பாக்கணும்.

‘பாலன் தி பாய்’ படத்தை பாராட்டிய ஜோதிகா : 

மலையாளத்தில் வெளியாகியுள்ள பாலன் தி பாய் திரைப்படத்தை நடிகை ஜோதிகா வெகுவாகப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "இயக்குநர் சிதம்பரம் மிக நேர்த்தியாக உருவாக்கிய திரைப்படம் இது.

என்றும் நடிகர் டோவினோ தாமஸ் தனது நட்சத்திர அந்தஸ்தை மறந்து, தனது சிறந்த நடிப்புகளில் ஒன்றை இதில் வழங்கிருக்கிறார் என்றும் தாய்மை மற்றும் அப்பாவித்தனம் இந்தக் கொடிய உலகில் எவ்வாறு சோதிக்கப்படுகின்றன என்பதைச் சொல்லும் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் தவறவிடாதீர்கள்.

" என்று தெரிவித்துருக்கிறார். மேலும், "மலையாளத் திரையுலகிலிருந்து வந்துள்ள மற்றுமொரு ரத்தினம் இது.." என்று தனது பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார் நடிகை ஜோதிகா.

“தர்மன்” படத்தின் பர்ஸ்ட் லுக் மேக்கிங் வீடிய : 

‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ படங்களை இயக்கிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ரஜினிகாந்தின் 173-வது படமான தர்மன் படத்த இயக்க உள்ளார். ஏற்கனவே, "இந்த படம் ஆக்சன் கலந்த கதையாகவும் இந்த படத்தில் ரஜினி மருத்துவராக நடிக்கிறார் என்றும் இது, படையப்பா மற்றும் வேட்டையாடு விளையாடு கலவையாக இருக்கும்.

" என்று இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெரிவிச்சிருந்தாரு. இந்த நிலையில், ‘தர்மன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கான மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுருக்காங்க. அதுல, மருத்துவர் வேடத்தில் ரஜினி போஸ் கொடுக்கிறாரு. தற்போது இந்த வீடியோ இணையத்தில் அதிக கவனத்தை பெற்றுட்டு வருது.

வெளியானது "சிங் கீதம்" படத்தின் தமிழ் டிரெய்லர் :

மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள "சிங் கீதம்" திரைப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகிருக்கு. இந்த படத்தில் அயான், ஷாலினி கொண்டெபுடி, அஹில்யா பம்ரூ உள்ளிட்டோர் நடித்திருக்காங்க. இந்த படம், "ஒரு கிராமமே பேசுவதற்கு பதிலாக சாபத்தின் காரணமாக பாட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது குறித்த கதையம்சம் கொண்டதா அமைந்திருக்கு.." தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படம், தெலுங்கில் கடந்த 11-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுருந்துச்சு. இந்த நிலையில், தமிழில் ஜூன் 26-ம் தேதி வெளியாக இருக்கிறது.

"மீசைய முறுக்கு -2" திரைப்படத்தின் புதிய பாடல் : 

ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடிக்கும் "மீசைய முறுக்கு -2" திரைப்படத்தின் "அடிபோடி" எனும் புதிய பாடல் வெளியாகிருக்கு. நடிகை குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் கேத்திகா ஷர்மா, யூடியூபர் ஹர்ஷத் கான் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறாங்க.

இந்த படத்தின் ஆரா 10/10, பப்பாளி பழமே, கோயிந்தம்மா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது "அடி போடி" எனும் புதிய பாடலை படக்குழுவினர் வெளியிட்டுருக்காங்க.

பாப் இசை மன்னனின் 17வது நினைவு தினம் : 

'பாப் இசை மன்னன்' என்று அறியப்பட்ட மைக்கேல் ஜாக்சனின் 17வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுது. ஆப்பிரிக்க அமெரிக்க பாப் இசைப் பாடகர், நடன இயக்குநர், பாடல் ஆசிரியர் எனப் பல முகங்கள் கொண்ட மைக்கேல் ஜாக்சன் ஜூன் 25, 2009ஆம் ஆண்டு காலமானாரு.

ஆரம்பத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லிருந்தாங்க. ஆனா, அவரது தனிப்பட்ட மருத்துவர் கான்ராட் முர்ரே (Dr. Conrad Murray) மைக்கேல் ஜாக்சனின் தூக்கத்திற்காக அளித்த அதிகப்படியான Propofol மற்றும் பிற மருந்துகள் காரணமாகவே அவர் இறந்தார்னு பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துருந்துச்சு.

இந்த நிலையில அவர் காலமாகி 17 ஆண்டுகள் ஆகியும் கூட மைக்கேல் ஜாக்சனின் ரசிகர்கள் அவரோட நடனத்தையும் பாடல்களையும் கொண்டாடி அவர அன்போட நினைகூர்ந்து அவருக்கு புகழ்சேர்த்து வர்றாங்க.

Related Link
தூங்காமல் வேலை பார்க்கும் ரஜினி

தூங்காமல் வேலை பார்க்கும் ரஜினி

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'ஆமா, நான் கர்ப்பமாக தான் இருக்கேன்..'

1
1 hr 16 mins agoshare
சமந்தா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau