news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உயிரிழந்தவருக்கு 10 மணி நேரம் சிகிச்சை? மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்
tv

Also Watch

உயிரிழந்தவருக்கு 10 மணி நேரம் சிகிச்சை? மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

பணம் பறிக்க திட்டம் என குற்றச்சாட்டு

20

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பணம் பறிக்க திட்டம் என குற்றச்சாட்டு

திருவள்ளூர் அருகே ஏற்கெனவே உயிரிழந்த பெண்ணுக்கு 10 மணி நேரம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக கூறி, மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர். பணம் பறிக்கும் நோக்கத்துடன் மருத்துவமனை நிர்வாகம் செயல்படுவதாக குற்றம்சாட்டிய உறவினர்கள் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ரமணா பட பாணியில்...
மருத்துவர்களிடம் உடல் ரீதியாக எந்த பிரச்னையாக இருந்தாலும் அதனை மறைக்க கூடாது, மருத்துவர்கள் கடவுள் போன்றவர்கள் என்பார்கள். ஆனால், ரமணா பட பாணியில் வி.எஸ். தனியார் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் சிலர், உயிரிழந்த ஒருவருக்கு 10 மணி நேரம் சிகிச்சை அளித்ததாகவும், பணம் பறிக்கும் நோக்கத்தோடு அவர்கள் செயல்படுவதாக கூறி, உறவினர்கள் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்துள்ளனர்.

தனியார் மருத்துவமனையில்...
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியை சேர்ந்த தேவிக்கு திருமாணமாகி, ஒரு மகன் உள்ளார். இவருக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் அவருக்கு உடல்நலம் நன்றாக இருந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி வயிற்று வலி காரணமாக சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள வி.எஸ். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேவியின் உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், நுரையீரலில் பாதிப்பு இருப்பதாக கூறி உள்ளனர். தேவியை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்றும் உறுதி அளித்த மருத்துவர்கள் சிகிச்சைக்காக 3 லட்சம் ரூபாய் வரை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

உயிரிழந்தார்... சிகிச்சை...
ஆனால், காலை 5.40 மணியளவில் தேவி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவர்களை நோக்கி கேள்விகளை எழுப்பியபோது, ’தேவிக்கு 20 சதவீதம் உயிர் இருக்கிறது, செயற்கை சுவாசம் பொருத்தி, சிகிச்சை அளித்து வருவதால், யாரும் பயப்பட வேண்டாம்,’ என தெரிவித்துள்ளனர்.

கதறி அழுத உறவினர்கள்
அதேபோல, மாலை 3.30 மணியளவில் நமது செய்தியாளர் சார்பில் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, தேவி சிகிச்சையில் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறினர். ஆனால், கிட்டத்தட்ட 10 மணி நேரம் கழித்து, தேவி உயிரிழந்து விட்டதாகவும், கூடுதலாக 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை செலுத்திவிட்டு உடலை பெற்றுக்கொள்ளுங்கள் என மருத்துவமனை தரப்பில் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு, "வரும்போது நல்லா வந்தா, திரும்பி போகும்போது பொணமா அனுப்புறாங்களே," என கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது. காலையில் உயிரிழந்து விட்டதாகவும், சிறிது நேரம் கழித்து உயிரோடு இருப்பதாகவும் மருத்துவர்கள் மாறி மாறி தெரிவிப்பதாகவும் உயிரிழந்தவருக்கு சிகிச்சை அளித்து தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் மருத்துவமனை நிர்வாகம் செயல்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

Related Link
பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ TO புழல் ஜெயில், வசமாக சிக்கிய வர்ஷினி வெங்கட்

பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ TO புழல் ஜெயில், வசமாக சிக்கிய வர்ஷினி வெங்கட்

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எனக்கும் சாந்திக்கும் தொடர்பா? கடுப்பாகி உண்மையை உடைத்த ஜான் பாண்டியன்

23
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved