news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கடலை சுற்றிப்பார்க்கச் சென்ற 2 சிறுவர்கள் பலி
tv

Also Watch

கடலை சுற்றிப்பார்க்கச் சென்ற 2 சிறுவர்கள் பலி

படகு பழுதான நிலையில்

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நிகழ்ந்த சோகம்

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சேவியர் என்பவரது மகன் ஜோஸ்வா, முத்து என்பவர் அது மகன் மனோஜ் உள்ளிட்ட 7 சிறுவர்கள் நேற்று பிற்பகல் ஒரு பைபர் படகில் கடலை சுற்றிவர திட்டமிட்டு பைபர் படகில் சென்றுள்ளனர்.

அப்பொழுது திடீரென படகு பழுதான நிலையில் படகில் இருந்த சிறுவர்கள் ஜோஸ்வா மனோஜ் மற்றும் இரண்டு சிறுவர்கள் ஆகியோர் கடலில் நீந்தி கரைக்கு சென்று விடலாம் என நினைத்து கடலில் குதித்து நீந்த துவங்கி உள்ளனர்

இந்த நிலையில் படகில் இருந்த மற்றொரு சிறுவர் இது குறித்து தனது தந்தைக்கு தகவல் தெரிவிக்க அவர் விரைந்து வந்து படகில் இருந்த மூன்று பேரையும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் என பேரை மீட்டார்.


தொடர்ந்து கடலில் குதித்து நீந்தி வந்த ஜோஸ்வா மற்றும் மனோஜ் ஆகிய இருவரை தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 படகுகளில் கடல் பகுதியில் தேடும் பணியில் நேற்று ஈடுபட்டனர் மேலும் தீயணைப்பு வீரர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் காணாமல் போன சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில், இரவு நேரம் என்பதால் அவர்களது இருவரையும் கண்டுபிடிப்பதில் தோல்வி ஏற்பட்டது தொடர்ந்து அனைவரும் கரை திரும்பினர்.

தொடர்ந்து இன்று அதிகாலை தருவைக்குளம் மீனவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் பல்வேறு படகுகளுடன் சென்று சங்கு குளி மீனவர்கள் கடலுக்கு இறங்கி தேடிய பொழுது ஜோஸ்வா மற்றும் மனோஜ் ஆகிய இருவரின் உடல்கள் கடலில் சிக்கி கிடைப்பதை கண்டு சக தருவைகுளம் சங்கு குளி மீனவர்கள் அவர்களது இருவரின் உடலையும் மீட்டு தருவைக்குளம் கிராமத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

தருவைகுளம் மீனவ கிராமத்தில் கடலுக்குச் சென்ற இரண்டு சிறுவர்கள் கடலில் குதித்து உயிரிழந்த சம்பவம் தருவை குளம் மீனவ கிராம மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
பெங்களூரு - சேலம் பயணிகள் ரயிலில் தீவிபத்து

பெங்களூரு - சேலம் பயணிகள் ரயிலில் தீவிபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved