Also Watch
Read this
By: Fyrose Banu

ஆடிப்பூரத்தை முன்னிட்டு இரண்டு லட்சம் வளையல் அலங்காரத்தில் மூலவர் கெங்கையம்மன் ஸ்ரீ மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயத்தில் இன்று ஆடிப்பூரம் முன்னிட்டு மூலவர் கங்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு இரண்டு லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது. 
முன்னதாக மூலவர் கெங்கையம்மன் ஸ்ரீ மகாலட்சுமி சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved