Also Watch
Read this
Posted on: Nov 28, 2025 11:44 AM
By: Web Team

தொடர் கனமழையின் காரணமாக திருவாரூர் கூத்தாநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் 2,500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமானதால் உழவர்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலமணலி, ராமானுஜமணலி, ஓகைப்பேரையூர், அரிவலூர் உள்ளிட்ட பகுதிகளில் தாளடி நெற்பயிர்கள் சேதமடைந்தன. குறுவை நெற்பயிர்கள் அறுவடை சமயத்தில் பெய்த மழையால் நெல்லை பாதி விலைக்கு விற்றநிலையில் மீண்டும் தாளடி நெற்பயிர்களும் சேதமடைந்ததாக விவசாயிகள் கவலை அடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved