திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியில் உள்ள பள்ளியில் உடல்நலக்குறைவால் ஒரே நாளில் 31 மாணவர்கள் விடுப்பு எடுத்த நிலையில், சுகாதாரத்துறையினர் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். அம்மைக்கான அறிகுறி உள்ளதாக கூறப்படும் நிலையில், பள்ளியில் உள்ள குடிநீர் உள்ளிட்டவைகளும் ஆய்வு எடுத்து செல்லப்பட்டுள்ளன.