news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 58 கால்வாய் திட்டத்திற்காக வைகை அணையில் நீர் திறப்பு
tv

Also Watch

58 கால்வாய் திட்டத்திற்காக வைகை அணையில் நீர் திறப்பு

உசிலம்பட்டி வந்தடைந்த வைகை நீர்

64

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
58 canal

தேனி மாவட்டத்தின், வைகை அணையில் இருந்து, உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர், தொட்டிப்பாலத்தை வந்தடைந்தது.

ஆசியாவிலேயே இரண்டாவது மிக நீளமான இந்த தொட்டிப்பாலம், திண்டுக்கல் மாவட்டம் வழியாக உத்தப்பநாயக்கனூர் வழி, சுமார் 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீரை கொண்டு செல்கிறது. தொட்டிப்பாலம் வழியாக உசிலம்பட்டி பகுதியில் உள்ள 33 கண்மாய்களுக்கு செல்லும் தண்ணீர், விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் குடிநீர் மற்றும் கால்நடை வளர்ப்பிற்கும் பயன்படுகிறது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கால்வாய் திட்டத்திற்கு, தண்ணீர் திறக்க கோரி, விவசாயிகள் வைத்த தொடர் கோரிக்கையின் அடிப்படையில், வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டு, உசிலம்பட்டி வந்தடைவது விவசாயிகள், பொது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மிச்செலின் லீ மேன்ஸ்' கோப்பை கார் பந்தய போட்டியில் AK அணி 3வது இடம்

19
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved