Also Watch
Read this
By: Manigandan Raja

மதுரையில் இறந்து விட்டதாக நினைத்த குழந்தை உயிருடன் இருப்பது தெரிய வந்ததால் பரபரப்பு நிலவியது. மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஆசிர்வாதம் மருத்துவமனையில் குறை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5.45 மணிக்கு பிறந்த பெண் குழந்தை 7 மணிக்கு இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்க உறவினர்கள் நல்லடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளார். கருப்பு நிற பிளாஸ்டிக் கவரில் வைக்கப்பட்டிருந்த குழந்தையிடம் அசைவை கண்ட உறவினர்கள் உடனடியாக குழந்தையை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது குழந்தை நலமாக உள்ள நிலையில்,ஆசிர்வாதம் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க குழந்தையின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved