news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திடீரென இடிந்து விழுந்த கான்கிரீட் மேற்கூரை
tv

Also Watch

திடீரென இடிந்து விழுந்த கான்கிரீட் மேற்கூரை

தஞ்சை

2

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tnj 01

கும்பகோணம் மாநகராட்சி தாராசுரம் நேரு அண்ணா காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வாங்க சென்ற நபர் மீது மேற்கூரை கான்கிரீட் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய நபர் குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி காண்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கும்பகோணம் மாநகராட்சி சொந்தமாக தாராசுரம் நேரு அண்ணா காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. நாள்தோறும் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி, மயிலாடுதுறை திருவாரூர் நாகப்பட்டினம் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு காய்கறிகள் பெருமளவில் இங்கிருந்து விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. கும்பகோணம் மாநகரத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது இதனை சுற்றி உள்ள எண்ணற்ற கிராமப் பகுதிகளை சில்லறை வியாபாரிகள், விற்பனைக்காக காய்கறிகளை இங்கு வந்து நாள் தோறும் வாங்கிச்செல்வது வழக்கம்.

இந்நிலையில், கும்பகோணம் ஏராகாரம் வழி நடப்பு பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் காலை இந்த தாராசுரம் காய்கறி அங்காடியில் காய்கறிகள் வாங்க வந்த போது, திடீரென அங்கிருந்த கான்கிரீட் மேற்கூரையின் ஒருபகுதி இடிந்து முருகன் தலை மற்றும் தோல் பட்டையில் விழுந்தது இதில் அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் சிறிய காயமுடன் முருகன் உயிர் தப்பினார் இந்த சம்பவம் குறித்த அங்கிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு தற்போது வெளியாகி காண் போரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 19082026

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved