news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விழாவில் கறி விருந்து
tv

Also Watch

tv

Read this

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விழாவில் கறி விருந்து

திண்டுக்கல், உலுப்பக்குடி

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திண்டுக்கல் கரி விருந்து

விழாவில் கறி விருந்து :

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உலுப்பகுடியில் வேட்டைக்காரன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல நூறு ஆண்டுகளாக பங்குனி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது.

இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. விழாவில் ஆடுகள் நேர்த்திக்கடனாக கோயிலுக்கு வழங்கப்படும். இவ்வாண்டிற்கான விழாவையொட்டி (திங்கட்கிழமை)நேற்று இரவு 1மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை துவக்கினர்.

பின்னர் நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன.50 மூடை அரிசியில் சாதம் தயாரானது. இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சாதமும், ஆட்டுகறி குழம்பும் பிரசாதமாக பறிமாறப்பட்டது. கறிவிருந்தில் புன்னாபட்டி, காட்டுவேலம்பட்டி,முளையூர்,வேலாயுதம்பட்டி,நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர்.

Related Link
மதுரை மத்திய தொகுதி பகுதியில் நாதகவினர் ஆர்ப்பாட்டம்

மதுரை மத்திய தொகுதி பகுதியில் நாதகவினர் ஆர்ப்பாட்டம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

4000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?

3
12 hrs 33 mins agoshare
Minister vignesh








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved