Also Watch
Read this
By: Web Team

பெரியபாளையம் அருகே, சாலையோரத்தில் திரும்பும் போது, சக்கரங்கள் சேற்றில் சிக்கி, சாலையின் குறுக்கே லாரி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், புதுவாயலில் இருந்து சரக்குகளை ஏற்றிய லாரி, பெரியபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆரணி பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தபோது, உயரழுத்த மின் கம்பியில் சிக்காமல் இருப்பதற்காக லாரி டிரைவர் லாரியை திருப்ப முற்பட்டார். அப்போது, லாரியின் சக்கரங்கள் சேற்றில் சிக்கி, சாலையின் குறுக்கே நின்றதால், பெரியபாளையம் புதுவாயல் சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி போலீசார், ஜெசிபி கிரேன் இயந்திரங்களின் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர், சேற்றில் சிக்கிய லாரி வெளியே எடுக்கப்பட்டு போக்குவரத்து சீரானது.