news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news இஸ்ரேலுக்கு டிரம்ப் கண்டனம்
tv

Also Watch

tv

Read this

இஸ்ரேலுக்கு டிரம்ப் கண்டனம்

எல்லை மீறக்கூடாது என அறிவுரை

15

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஈரானின் South Pars எரிவாயு நிலையம் மீது, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்து உள்ளார். எல்லை மீறிய கோபத்தில் என்ன செய்கிறோம்? என்றே தெரியாமல் செயல்படக்கூடாது என்றும் கண்டித்துள்ளார். ஈரானின் எண்ணெய், எரிவாயு தளங்களை இனி, இஸ்ரேல் குறி வைக்காது என்று, டிரம்ப் உத்தரவாதம் அளித்து உள்ளார். பிரச்சனைக்கு தொடர்பே இல்லாத கத்தார் எரிவாயு நிலையம் மீது, இனி தாக்குதல் தொடுத்தால் விளைவுகள் விபரீதமாகும் என்றும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

அமெரிக்காவுக்கு தெரியாது
இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவு;
மத்திய கிழக்கில் நிகழ்ந்த சம்பவங்களால் ஏற்பட்ட கோபம் காரணமாக இஸ்ரேல், ஈரானில் உள்ள சவுத் பார்ஸ் எரிவாயு வயல் என்ற முக்கிய மையத்தின் மீது, வன்முறைத் தாக்குதலை நடத்தி உள்ளது. சவுத் பார்ஸ் எரிவாயு வயல் எனப்படும் அமைப்பில் மிகச் சிறிய பகுதி மட்டுமே இந்த தாக்குதலுக்கு உள்ளானது. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு முன்னரே எதுவும் தெரிந்திருக்கவில்லை. மேலும், கத்தார் நாடு இந்த தாக்குதலில் எந்த வகையிலும் எந்த வடிவிலும் சம்பந்தப்படவில்லை. தாக்குதல் நிகழப்போகிறது என்பது குறித்தும் அந்நாட்டுக்கு சிறிதும் தெரிந்திருக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக, ஈரானுக்கு இந்த உண்மைகளோ அல்லது சவுத் பார்ஸ் தாக்குதல் தொடர்பான வேறு எந்த முக்கிய விவரங்களோ தெரிந்திருக்கவில்லை.

சிறிதும் தயங்க மாட்டேன்
இதனால், எவ்வித நியாயமும் இன்றி, அநீதியான முறையில் கத்தாரின் எல்என்ஜி எரிவாயு மையத்தின் ஒரு பகுதியை ஈரான் தாக்கி உள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் மதிப்புமிக்கதுமான இந்த சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் இனிமேல் எவ்விதத் தாக்குதலையும் நடத்தாது. ஒருவேளை ஈரான் அறிவீனமாகச் செயல்பட்டு, முற்றிலும் நிரபராதியான கத்தார் நாட்டை மீண்டும் தாக்கத் துணிந்தால் நிலைமை மாறும். கத்தார் மீது ஈரான் தாக்குதல் நடத்த துணிந்தால், இஸ்ரேலின் உதவியுடனோ அல்லது உதவி இன்றியோ அமெரிக்கா, சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீது ஈரான் இதுவரை கண்டிராத அளவில் தீவிர சக்தியுடனும் வல்லமையுடனும் தாக்கி முழுமையாக அழிக்கும். ஈரானின் எதிர்காலத்தின் மீது, இது ஏற்படுத்தக்கூடிய நீண்ட காலத் தாக்கங்களை கருத்தில் கொண்டு இத்தகைய தீவிர வன்முறை மற்றும் அழிவை நான் அங்கீகரிக்க விரும்பவில்லை. எனினும், கத்தாரின் எல்என்ஜி மையம் மீண்டும் தாக்கப்படுமானால், அதைச் செய்ய சிறிதும் தயங்க மாட்டேன்
இவ்வாறு டிரம்ப் பதிவிட்டு உள்ளார்.


Related Link
பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

4000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?

5
15 hrs 37 mins agoshare
Minister vignesh








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved