Also Watch
Read this
By: Web Team
சுமார் 16 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இக்கோயிலில் 2028ஆம் ஆண்டு மகாமக விழா நடைபெற உள்ளதையொட்டி கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கடந்த 27ஆம் தேதி யாக சாலை பூஜைகள் தொடங்கி 8ஆம் கால யாகசாலை பூஜை இன்று நடைபெற்றது.
இதையடுத்து யாக சாலையில் வைக்கப்பட்ட புனிதநீர் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, கோவி.செழியன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved