news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கனவை கலைக்கும் மாற்றுக்கட்சியினர்
tv

Also Watch

கனவை கலைக்கும் மாற்றுக்கட்சியினர்

டெல்டாவில் நடப்பது என்ன?

63

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுகவின் கோட்டையாக உள்ள டெல்டா மாவட்டத்தில் அதிமுகவிற்கு ஆறுதலாக இருந்த வைத்தியலிங்கம், சமீபத்தில் திமுகவில் இணைந்தது உள்ளூர் திமுக நிர்வாகிகளை அப்செட்டில் ஆழ்த்தி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக பட்ட கஷ்டத்திற்கு பலன் இல்லாமல் போய்விட்டதே என்ற வருத்தத்தில் ஒரத்தநாடு திமுக நிர்வாகிகள் இருக்கும் நிலையில், தஞ்சையை கைப்பற்றவும் 10 பேர் களத்தில் இருப்பதால் கடும் போட்டி நிலவி வருகிறது.

திமுகவின் கோட்டையான தஞ்சை
தமிழகத்தை திமுக, அதிமுக என எந்த கட்சி ஆண்டாலும் டெல்டா மாவட்டங்களில் கோலோச்சி இருப்பது என்னவோ திமுக தான். திமுகவின் கோட்டையான தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 7 தொகுதிகளை கைப்பற்றியது. அதிமுகவினர் உருண்டு புரண்டாலும் தஞ்சையை தங்கள் கோட்டையாக மாற்றவே முடியவில்லை. அந்த வரலாற்றை முழுமையாக அழிக்க முடியாவிட்டாலும் சிறு ஆறுதல்படுத்தும்வகையில், வைத்தியலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி பெற்று அதிமுகவின் மானத்தை காப்பாற்றினார். அந்த ஒரே ஒரு தொகுதியிலும் யார் கண்பட்டதோ தெரியவில்லை? தனது எம்எல்ஏ பதவியையே ராஜினாமா செய்துவிட்டு கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் வைத்தியலிங்கம்.

விட்டதை பிடிக்க வேண்டும்
கடந்த முறை தான் ஒரத்தநாடு கைநழுவி சென்றது, இந்த முறையாவது விட்டதை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுகவை சேர்ந்த துணை மேயர் அஞ்சுகம் பூபதி, எல்.ஜி.அண்ணா, மகேஷ் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கடந்த 5 ஆண்டுகளாக இரவு பகல் பாராமல் வேலை செய்து வந்திருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் சுக்கு நூறாக்கும் வகையில் வைத்தியலிங்கம் திமுகவில் இணைந்துவிட்டார். ஏற்கனவே சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த வைத்தியலிங்கம் வந்தது திமுக தலைமைக்கு வேண்டுமானால் கோட்டையை வலுப்படுத்த கூடுதல் பலம் கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்தை கொடுக்கலாம். ஆனால், ஒரத்தநாட்டை பிடிக்க 5 ஆண்டுகளாக மக்கள் பணிகளை ஓடோடி செய்துவரும் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, எல்.ஜி.அண்ணா, மகேஷ் கிருஷ்ணசாமிக்கு சந்தோஷத்தை கொடுக்கவில்லையாம். மாறாக, இத்தனை ஆண்டுகள் பட்ட கஷ்டத்திற்கு பலன் இல்லாமல் போய்விட்டது என்ற வருத்தம்தான் இருக்கிறதாம். கூடவே, தொகுதி நமக்கில்லை என்ற தொய்வில் இருக்கிறார்களாம்.

மீண்டும் மீண்டும் அமர வேண்டுமா?
ஒரத்தநாட்டில் தான் இந்த நிலையென்றால் தஞ்சையிலும் இதே நிலைதானாம். ஒரு தொகுதிக்கு 10 பேர் போட்டிபோடும் சூழல் உள்ளதாம். மேயர் சன் ராமநாதன், சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சை இளைஞர் அணியை சேர்ந்த உதயநிதி ஆகிய 3 பேரும், வரும் தேர்தலில் எப்படியாவது சீட்டை கேட்டுப்பெற வேண்டும் என்பதற்காக அறிவாலயத்தை நோக்கி நடையாய் நடக்கிறார்களாம். அதிலும், நகர செயலாளர் பதவி பறிக்கப்பட்டு கட்சி தலைமையின் கண்டிப்பில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் மாதத்திற்கு ஒருமுறை மறக்காமல் அறிவாலயம் சென்று அட்டெண்டன்ஸ் போடுகிறாராம். அதுபோக, கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் 7 பேர் விருப்பமனு தாக்கல் செய்துவிட்டு, அறிவாலயத்தின் பதிலுக்காக அமைதியோடு பொறுமை காத்துக் கொண்டிருக்கிறார்களாம். ஏற்கெனவே பதவியில் இருந்தவர்கள் தான் மீண்டும் மீண்டும் அமர வேண்டுமா? நாங்களும்தான் கட்சிப்பணி செய்கிறோம் அதற்கான பலனும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விருப்பமனு தாக்கல் செய்த 7 பேரும் இருக்கிறார்களாம்.

திமுகவிற்கு திமுகவினரே போட்டி
மேயர் சன் ராமநாதன் மீது சில சர்ச்சைகள் இருந்தாலும் சமீபகாலமாக தஞ்சை மக்கள் எளிதில் அணுகக்கூடிய ஒருவராக உள்ளார். அதேநேரம், சிறந்த மாநகராட்சிக்கான விருதையும் பெற்றார். அதேபோல், துணை முதலமைச்சர் உதயநிதிதியின் பிறந்த நாள் விழாவை 100 நாட்கள் நடத்தி கட்சி தலைமையிடம் நல்ல பெயரெடுத்தார் உதயநிதி. தஞ்சையை பொறுத்தவரை யார் திமுக வேட்பாளராக அறிவிக்கப்படுகிறாரோ அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆவது உறுதி, தேர்தல் நடத்தி வாக்குகளை எண்ண வேண்டும் என்ற அவசியமே இல்லை. அதனால்தான், தஞ்சையை கைப்பற்ற இத்தனை போட்டா போட்டியாம். பொதுவாக திமுகவிற்கு அதிமுக போட்டியாகவும், அதிமுகவிற்கு திமுக போட்டியாகவும் இருக்கும். ஆனால், தற்போது டெல்டா மாவட்டங்களில் திமுகவிற்கு திமுகவினரே போட்டியாக உள்ளதால் உடன்பிறப்புகள் புலம்பி வருகிறார்களாம்.

Related Link
செக் வைக்கும் எ.வ.வேலு?

செக் வைக்கும் எ.வ.வேலு?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சூர்யா, ஜோதிகாவின் காணொலிக்கு 3.3 மில்லியன் Likes

39
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved