நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக - கர்நாடக எல்லையான தொரப்பள்ளியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், மைசூரில் இருந்து குருவாயூர் சென்ற கேரள அரசு பேருந்தில் போதைப்பொருள் கடத்தி சென்ற இளைஞரை கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான 600 கிராம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.