Also Watch
Read this
By: Fyrose Banu

பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் தேர் பவனி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று மனமுருகி வழிபட்டனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் தேர் பவனி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி கடந்த 6 ந்தேதி கொடியேற்றத்துடன் பெருவிழா தொடங்கியது. இதனை தொடர்ந்து ஆலயம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது.

முக்கிய நிகழ்வான தேர் பவனி முன்னிட்டு தேரில் மின் விளக்கு மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வான வேடிக்கையுடன் தேர் பவனி நடைபெற்றது. புனித விண்ணேற்பு அன்னைக்கு கிறிஸ்துவர்கள் மலர் தூவி வழிபட்டனர். இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved