news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews குடிநீர் வாரிய அலுவலகத்தில் குளோரின் வாயு கசிவு
tv

Also Watch

tv

Read this

குடிநீர் வாரிய அலுவலகத்தில் குளோரின் வாயு கசிவு

ரெட்டேரி, சென்னை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
குளோரின் வாயு கசிவு

குளோரின் வாயு கசிவு : 

சென்னை ரெட்டேரியில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில் ஏற்பட்ட குளோரின் வாயு கசிவால் மூன்று ஒப்பந்த ஊழியர்கள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ரெட்டேரி பகுதியில் செயல்பட்டு வரும் சென்னை குடிநீர் வாரிய அலுவலகத்தில் இன்று பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் கள் திடீரென குளோரின் வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு பணியில் இருந்த குணசேகரன் வயது 27, ராஜா வயது 31 மற்றும் சரவணன் வயது 31 ஆகிய மூவரும் வாயுவை சுவாசித்ததால் திடீரென மூச்சுத் திணறலால்
பாதிக்கப்பட்டனர்.


உடனடியாக சக ஊழியர்கள் அவர்களை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனை க்கு அழைத்துச் சென்றனர். அங்கு மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு
திரும்பினர்.

பாதிக்கப்பட்ட மூவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் சென்னை குடிநீர் வாரியத்தில் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குளோரின் வாயு கசிவு எவ்வாறு ஏற்பட்டது..?

பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்பட்டதா..? என்ற கோணங்களில் ராஜமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிநீர் வாரிய அலுவலகத்தில் ஏற்பட்ட குளோரின் வாயு கசிவு சம்பவம் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Link
அரசு மருத்துவமனையை ஆய்வு  செய்த அமைச்சர் தென்னரசு

அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் தென்னரசு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நூறு சதவீதம் குதிரை பேரம் - இன்பதுரை விமர்சனம்

2
7 mins agoshare
நூறு சதவீதம் குதிரை பேரம் - இன்பதுரை விமர்சனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved